புதிய வருமானவரி விதிப்பால் நடுத்தர மக்களுக்கு பயன் கிடைக்குமா?

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, ஆண்டு வருவாய் ரூ.3 லட்சம் வரை பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது. ரூ.3 லட்சத்துக்கு மேல் ரூ.6 லட்சம் வரை 5 சதவீத வரி செலுத்த வேண்டும் என இருந்ததை ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பெறுவோருக்கு 5 சதவீத வரி என மாற்றப்பட்டுள்ளது. இதுபோல் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.15 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

இதன்மூலம் மாத சம்பளதாரர்கள் புதிய வரி விதிப்பு முறையில் ரூ.17,500 வரியை மிச்சப்படுத்தலாம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதுபோல், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு நிரந்தர வரிக்கழிவு ரூ.15,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதச்சம்பளத்தை நம்பியுள்ள நடுத்தர மக்களுக்கு வருமான வரிதான் பெரிய பிரச்னையாக உள்ளது. சேமிக்கக் கூட முடியாது அளவுக்கு வருமான வரியிலேயே சம்பளத்தில் கணிசமான ஒரு பகுதியை இழந்து விடுகின்றனர். ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்றவையும் பெரிய அளவில் வரி சேமிக்க உதவவில்லை.

புதிய வரி விதிப்புக்கு மாறினால் இந்த முதலீடுகளை காட்ட முடியாது. பயணப்படி (எல்டிஏ), வீட்டு வாடகைப்படி (எச்ஆர்ஏ), தொழில் வரி, வீட்டுக்கடன் வட்டி மற்றும் வருமான வரிச் சட்டம் 80சிசிடி (தேசிய பென்ஷன் திட்டத்தில் நிறுவனங்கள் செலுத்தும் தொகை) தவிர 80 சி, 80டி, 80இ போன்ற பிரிவுகளின் கீழ் வரிச்சலுகை பெற முடியாது. சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கான நிரந்தர வரிக்கழிவு போக, 80 சிசிஎச் பிரிவில் அக்னிவீர் நிதி வழங்குவோர் அதற்குரிய வரிச்சலுகையை பெறலாம். புதிய வரி முறைக்கு மாறுவோருக்கு அதிகபட்சமான சேமிப்பே ரூ.17,500 மட்டும்தான் என பட்ஜெட் உரையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உச்சபட்ச சேமிப்பே தவிர பெரிய அளவில் வரிச் சேமிப்பு பலன் கிடைக்காது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பழைய வரி விதிப்பு முறையில் 87 ஏ பிரிவில் வரிக்கழிவு சேராது. புதிய வரி விதிப்பு முறையில் ரூ.25,000 வரை வழிக்கழிவு கிடைக்கும். 30 சதவீத வரிப்பிரிவில் உள்ளவர்கள், நிரந்தர வரிக்கழிவு தொகையை உயர்த்தியதன் மூலம் கூடுதலாக ரூ.7,500 மட்டுமே வரி சேமிக்க முடியும். பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவு உச்சவரம்பு உயர்த்தாதது நடுத்தர மக்களை கடும் ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் வரி ஆதாரம் அதிகம். மொத்த மக்கள் தொகையில் 43 சதவீதம் பேர் வரி செலுத்துகின்றனர். ஆனால் இந்தியாவில் 2 சதவீதம் பேர் மீதுதான் மொத்த வரிச்சுமையும் விழுகிறது. நிறுவன வருமான வரியை பொறுத்தவரை கடந்த 2023-24 கணக்கீட்டு ஆண்டின்படி 10.7 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளன. அதில் 5.6 லட்சம் நிறுவனங்கள் தான் வரி செலுத்தியுள்ளன. மேலும் 5 சதவீத நிறுவனங்கள்தான் மொத்த கார்ப்பொரேட் வரியில் 97 சதவீதம் செலுத்துகின்றன.

பட்ஜெட்டில் அறிவித்த மாற்றத்தின்படி
புதிய வரி விதிப்பில் எவ்வளவு வரி?
ஆண்டு
வருவாய் புதிய வரி முறை
(பட்ஜெட்டுக்கு
முந்தையது) புதிய வரி முறை
(பட்ஜெட்டுக்கு
பிந்தையது)
ரூ.7,00,000 ரூ.42,500 வரி இல்லை
ரூ.7,50,000 ரூ.54,600 வரி இல்லை
ரூ.8,00,000 ரூ.65,000 வரி இல்லை
ரூ.8,50,000 ரூ.75,400 ரூ.28,600
ரூ.9,00,000 ரூ.85,800 ரூ.33,800
ரூ.9,50,000 ரூ.96,200 ரூ.39,000
ரூ.10,00,000 ரூ.1,06,600 ரூ.42,200
ரூ.11,00,000 ரூ.1,32,600 ரூ.55,900
ரூ.12,00,000 ரூ.1,60,800 ரூ.71,500
நிரந்தர வரிக்கழிவு, செஸ் வரி சேர்த்து

ஒன்றிய அரசுக்கு வரி வருவாய்
நிதியாண்டு கார்ப்பரேட்
வரி தனிநபர்
வருமான வரி
2019-20 ரூ.5,56,876 கோடி ரூ.4,92,654 கோடி
2021-22 ரூ.7,12,037 கோடி ரூ.6,96,243 கோடி
2022-23 ரூ.8,25,834 கோடி ரூ.8,33,260 கோடி
2023-24 ரூ.9,22,675 கோடி ரூ.10,22,325 கோடி
2024-25 ரூ.10,42,830
கோடி ரூ.11,56,000 கோடி
2024-25ல் பட்ஜெட் மதிப்பீடு

The post புதிய வருமானவரி விதிப்பால் நடுத்தர மக்களுக்கு பயன் கிடைக்குமா? appeared first on Dinakaran.

Related Stories: