செந்தில் பாலாஜி கைது சட்டத்திற்கு புறம்பானது: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி: சட்டவிரோத.பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ராம் சங்கர் வாதத்தில், செந்தில் பாலாஜி கடந்த 13 மாதங்களுக்கு முன்பாக சட்டத்திற்கு புறம்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை கூட செய்து கொண்டார். தற்போதும் உடல்நிலை பாதிக்கப்பட்டுதான் இருக்கிறார். விசாரணை எப்போது முடியும் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சமாக இருக்கிறது. உடல்நிலையை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

The post செந்தில் பாலாஜி கைது சட்டத்திற்கு புறம்பானது: உச்ச நீதிமன்றத்தில் வாதம் appeared first on Dinakaran.

Related Stories: