சுவையான பரங்கிக்காய் பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,
தோல் சீவி, கேரட் துருவியில் துருவிய பரங்கிக்காய் (பழம் கூடாது) – ஒரு கப்,
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

அரைக்க:

புதினா – 6 டேபிள் ஸ்பூன்,
கொத்த மல்லித் தழை – 4 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
வேர்க்கடலை – கால் கப்,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
மஞ்சள் தூள் – சிட்டிகை,
சின்ன வெங்காயம் – 6.

செய்முறை

பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற விடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பரங்கிக்காய் துருவலை வதக்கி, பின்னர் அரைத்த விழுதை பச்சை வாசனை போக வதக்கி, மூன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து, அரிசி சேர்த்து கிளறி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.

 

The post சுவையான பரங்கிக்காய் பிரியாணி appeared first on Dinakaran.