ரூ.65 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகள்

 

சேந்தமங்கலம், ஜூலை 22: புதுச்சத்திரம் ஒன்றியத்தில், மாவட்ட ஊராட்சி குழு நிதி மூலம் நடைபெற்று வரும் குடிநீர் வளர்ச்சித் திட்டப் பணிகளை துணைத் தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஊராட்சி குழு நிதி மூலம், புதுச்சத்திரம் ஒன்றியம் தத்தாத்திரிபுரம், ஏழூர், கண்ணூர்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகள் செய்ய ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் செந்தில்குமார், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் தொட்டி ஆகியவற்றின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சேவகவுண்டம்பாளையம் பகுதியில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, முத்துலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள்
உடனிருந்தனர்.

The post ரூ.65 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: