காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க அண்ணாமலைக்கு அருகதையில்லை: செல்வப்பெருந்தகை பாய்ச்சல்

சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தலைவர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். யாருக்கேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அதை உளவுத்துறை கண்டறிந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூலிப்படையை சேர்ந்தவர்கள் காவல்துறை மேல் தாக்குதல் நடத்தினால், அவர்களுடைய உயிரை பாதுகாக்க என்கவுன்டர் செய்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புலன் விசாரணை சரியான முறையில் சென்று கொண்டுள்ளது என்பதை நாங்கள் நம்புகின்றோம். தமிழ்நாட்டு காவல்துறையை குறைத்து மதிப்பிட வேண்டாம். காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சித்து பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது. யுபிஎஸ்சி தலைவர் மனோஜ்சோனி ராஜினாமா செய்துள்ளார்.

அவர் ஏன் ராஜினாமா செய்தார் என அண்ணாமலை சொல்ல வேண்டும். எல்லாற்றிலும் ஊழல், தேர்வுகளில் முறைகேடு, ஆள் மாறாட்டம் செய்கின்றனர். கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளி மாணவர்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு தேர்வெழுதி தேர்ச்சி பெறும் வாய்ப்பு கிடைப்பதில்லை.அம்மா உணவகத்தை முதல்வர் ஆய்வு செய்தது வரவேற்கத்தக்கது. முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமாக இருந்தாலும், அதற்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் முதல்வர் கூடுதல் நிதி ஒதுக்கியது பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க அண்ணாமலைக்கு அருகதையில்லை: செல்வப்பெருந்தகை பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: