ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் உயிருக்கு ஆபத்து: ஒன்றிய உள்துறை எச்சரிக்கை

திருமலை: : ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் உயிருக்கு ஆபத்து உள்ளதாக உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. அதில் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆந்திர மாநில தேர்தலில் தெலுங்கு தேசம் பெற்ற வெற்றிக்கு நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் பங்கு மிக முக்கியமானது. இதையடுத்து ஆந்திர மாநில துணை முதல்வராக பவன்கல்யாண் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒன்றிய உளவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில சட்டவிரோத அமைப்புகளிடம் பவன் கல்யாண் பற்றிய பேச்சு வந்துள்ளதாகவும், அந்த குழுக்கள் யார் என்பதை இப்போது கூற முடியாது என உளவுத்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

The post ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் உயிருக்கு ஆபத்து: ஒன்றிய உள்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: