இதையடுத்து பூஜா வாசிம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இச்சர்ச்சைகளால் அவர் இதற்கு முன்பு செய்த குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் பூஜா கேத்கர் விவகாரம் குறித்து யு.பி.எஸ்.சி மீது பல கேள்விகள் எழுந்துள்ளதாக பவன் கேரா தெரிவித்துள்ளார். அதில், பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேட்கர், போலி ஆவணங்களை சமர்ப்பித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம், UPSC ஆட்சேர்ப்பு நடைமுறையின் நேர்மைத்தன்மை மீது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
ஆட்சேர்ப்பின்போது இது போன்ற எத்தனை தகுதியற்ற நபர்கள், இந்த ஓட்டைகள் மூலம் அரசின் உயர்ப் பதவிகளுக்குள் நுழைந்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. UPSC-ன் வெளிப்படைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக் குழுவை அமைத்து முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
The post பூஜா கேத்கர் விவகாரம்; யு.பி.எஸ்.சி நடைமுறையின் நேர்மைத்தன்மை மீது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: பவன் கேரா விமர்சனம் appeared first on Dinakaran.