கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு காசோலை, பாராட்டு சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, கலை பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 கலைப் பிரிவுகளில் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி ஆவடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதற்கான பரிசளிப்பு விழா கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகம் முன்னிலை வகித்தார்.

குரலிசை பிரிவில் முதல் பரிசு ஆர்.கௌதம், 2ம் பரிசு தி.சாருகாசி, 3ம் பரிசு த.தவசீலி, கருவியிசை பிரிவில் முதல் பரிசு (நாதஸ்வரம்) எம்.வெங்கடேஸ்வரன், 2ம் பரிசு (தவில்) வி.தினேஷ், 3ம் பரிசு (நாதஸ்வரம்) டி.குகன், பரதநாட்டியம் பிரிவில் முதல் பரிசு ம.சுகி பிரார்த்தனா, 2ம் பரிசு ரா.வனமாலிகா, 3ம் பரிசு டி.கே.கிரிதர்ஷினி, கிராமிய நடன பிரிவில் முதல் பரிசு பி.பிரசன்னா, 2ம் பரிசு உ.அ.ஷியாம் கிஷோர், 3ம் பரிசு நா.கௌதமி, ஓவிய பிரிவில் முதல் பரிசு மு.மணிகண்டன், 2ம் பரிசு ஆர்.அபிராமி, 3ம் பரிசு ரா.லிவ்ய  ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதன்படி முதல் பரிசாக ரூ.6 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.4,500 ம், 3ம் பரிசாக ரூ.3,500 வீதம் 5 கலைப் பிரிவுகளில் மொத்தம் 15 வெற்றியாளர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

 

The post கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு காசோலை, பாராட்டு சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: