வாழைத்தண்டு கஸ்டர்டு டெசர்ட்

தேவையானவை:

நறுக்கிய இளம் நாரில்லா வாழைத்தண்டு – ஒரு கைப்பிடி,
மாதுளை முத்துக்கள் – ¼ கப்,
பச்சை (அ) கருப்பு திராட்சை – ¼ கப்,
உப்பு – சிட்டிகை.

கஸ்டர்டு தயாரிக்க

Full Cream Milk – ½ லிட்டர், வெனிலா(அ) ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்டு பவுடர் – 3 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – 50 கிராம்.

செய்முறை:

கஸ்டர்டு பவுடரை சிறிது நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பாலைக் கொதிக்கவிட்டு, சர்க்கரைப் பொடி, கரைத்த கஸ்டர்டு கரைசல் சேர்த்து கட்டியின்றி நிதானமான தீயில் கிளறி இறக்கி, சிட்டிகை உப்பு, நறுக்கிய தண்டு, மாதுளை முத்துக்கள், திராட்சை சேர்த்து நன்கு கலந்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து கூலாக பரிமாறவும்

 

The post வாழைத்தண்டு கஸ்டர்டு டெசர்ட் appeared first on Dinakaran.