உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்

புதுடெல்லி: நீதிபதிகள் ஆர்.மகாதேவன், கோடீஸ்வர் சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.கோடீஸ்வர் சிங் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஏற்ற ஒன்றிய அரசு, இருவரையும் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோடீஸ்வர் சிங் ஆகியோர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி உட்பட அதன் முழு நீதிபதிகள் எண்ணிக்கையான 34ஐ எட்டி உள்ளது. வரும் செப்படம்பர் 1ம் தேதி நீதிபதி ஹிமா ஹோலி ஓய்வு பெறும் வரை 34 நீதிபதிகளுடன் உச்ச நீதிமன்றம் இயங்கும். புதிதாக பதவியேற்ற நீதிபதி கோடீஸ்வர் சிங், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

The post உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: