தூய பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி, வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவிற்கு பல ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம்.

12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கொள்வர். தூத்துக்குடியில் 442வது ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழா கொண்டாடப்பட உள்ளது. பேராலய திருவிழா ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. திருவிழாவிற்காக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் திருவுருவ பவனி ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. இந்நிலையில் தூய பனிமய மாதா பேராலய விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.

The post தூய பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: