கோவை, ஜூலை 18: ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட நிகழ்ச்சி கோவை மோப்பரிபாளையம் பேரூராட்சியில் இன்று (18ம் தேதி) நடைபெறவுள்ளது. உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று (18ம் தேதி) முதல் 19ம் தேதி வரை சூலூரில் நடைபெற உள்ளது. மேலும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இந்த முகாமில் மனுக்கள் பெறப்பட்ட பின்பு பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நடைபெறும் திட்டப்பணிகளை கோவை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை கோவை மாவட்ட கலெக்டர் காந்தி குமார் பாடி தலைமையில் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
The post மோப்பரிபாளையம் பேரூராட்சியில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட நிகழ்ச்சி appeared first on Dinakaran.