×
Saravana Stores

தொழிலதிபரிடம் ரூ.9.14 கோடி மோசடி

 

கோவை, ஜூலை 18: கோவை ராம்நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் (60). தொழில் நிறுவன உரிமையாளர். இவர் போட்டோ கலர் லேப் நடத்தி வருகிறார். இவருக்கு கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவர் மனைவி ஆனந்தி ஆகியோரின் அறிமுகம் 10 ஆண்டிற்கு முன் ஏற்பட்டது. ராஜேஷ், ஆனந்தி ஆகிய 2 பேரும், ஜேம்சிடம், ‘‘பல்வேறு இடங்களில் வீடு, நிலம் போன்றவை வங்கி மூலமாக ஏலத்திற்கு விடப்படுகிறது. இதில் அதிக மதிப்புள்ள சொத்துக்களை குறைந்த விலைக்கு வாங்கி தருகிறோம்’’ எனக்கூறியுள்ளனர். மேலும், பிட் காயின் மற்றும் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறினர். இதைத்தொடர்ந்து ஜேம்ஸ் பல்வேறு கட்டங்களில் ரூ.9.14 கோடியை 2 பேரிடமும் கொடுத்துள்ளார். ஆனால் பணம் பெற்ற பின்னர் 2 பேரும் அதை திருப்பி தரவில்லை. மேலும் இவர்கள் 2 பேரின் செயல்பாடுகளில் ஜேம்சுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பணத்தை பீளமேடு பகுதியில் வைத்து கொடுத்துள்ளதாக ஜேம்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலதிபரிடம் ரூ.9.14 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,James ,Ramnagar, Coimbatore ,Rajesh ,Anandi ,Ramanathapuram, Coimbatore ,Dinakaran ,
× RELATED அருப்புக்கோட்டையில் ஜேம்ஸ் & கோவின் கிளை துவக்கம்