வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தமா?.. நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். நீலகிரி மாவட்டத்தில் 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் கோவையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்க கடலில் வரும் 19ம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்பு உருவாக்கி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 12 முதல் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு உள்ளதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும் நாளை 7 முதல் 11 செ.மீ மழை பெய்யும் என்பதால் நாளை மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தமா?.. நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!! appeared first on Dinakaran.

Related Stories: