×
Saravana Stores

இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி நீக்கக்கோரி கோவை எம்.பி.யிடம் எல்ஐசி ஊழியர்கள் மனு

 

கோவை, ஜூலை 17: இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கான நாடு முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் வி.சுரேஷ், இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் கோவை கோட்ட பொது செயலாளர் துளசிதரன், பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி நீக்கக்கோரி கோவை எம்.பி.யிடம் எல்ஐசி ஊழியர்கள் மனு appeared first on Dinakaran.

Tags : LIC ,Coimbatore ,All India Insurance Employees Union ,Dinakaran ,
× RELATED தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை...