- காப்பீட்டுத் திட்டம்
- திருப்பலுக்கன்ரம்
- திருக்கழுக்குன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- விரிவான
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
- நகராட்சித் தலைவர்
- யுவராஜ்
- சத்யமூர்த்தி
- பழனி
- தேன்மொழி இளங்கோ
- முகாம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, பழனி, தேன்மொழி இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு உறுப்பினர் புதிய அட்டை பெற விண்ணப்பித்தனர். இம்முகாமினை தொடர்ந்து அடுத்த மாதம் 26ம்தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார். திமுக நிர்வாகிகள் செங்குட்டுவன், விவேகானந்தன், சுரேஷ், சரவணன், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மருத்துவ காப்பீடு திட்ட முகாம் appeared first on Dinakaran.