- செங்கல்பட்டு
- மாவட்டம்
- கலெக்டர்
- அருண்ராஜ்
- சமூக நலன்புரி மற்றும் மகளிர் உரிமைகள் திணைக்களம்
- நாசா
- தின மலர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசிநாள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம், நாசாவின் முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லாவின் நினைவாக, தமிழ்நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு “துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது” வழங்கப்பட உள்ளது.
மேற்படி விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை 2024ம் ஆண்டு சுதந்திரதின விழாவின்போது தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழக அரசின் விருதுகளுக்கான https://www.awards.tn.gov.in/-என்கிற இணையதள பக்கத்தில் நாளைக்குள் (18ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
மேற்படி இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு மேற்படி விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்தது குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக 3 செட் Booklet தயார் செய்து இம்மாதம் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், B-பிளாக், 4வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு- 603 111 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் appeared first on Dinakaran.