சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 5
பெரிய வெங்காயம் – 1
சாம்பார் பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எண்ணெய் – சிறிது
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
முதலில் சர்க்கரை வள்ளிக் கிழங்கை தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, கழுவிய சர்க்கரை வள்ளிக் கிழங்கினை போட்டு, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைத்துக் கொண்டு, அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். விசில் அடங்கிய பின் குக்கரைத் திறந்து, கிழங்கின் தோலை எடுத்துவிட்டு, ஒரே மாதிரியான சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்த பின், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்துக் கொண்டு, பின் வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும்வரை வதக்கி விட்டு, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதன் வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும். இப்போது வேக வைத்து வெட்டி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து நன்றாகக் கிளறி விட வேண்டும். கிழங்கில் மசாலாப் பொடி அனைத்தும் நன்கு ஒன்றுடன் ஒன்று கலந்து, நன்கு வாசனை வரும்போது, அடுப்பில் இருந்து இறக்கினால் சூப்பரான சுவையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் ரெடி!
The post சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் appeared first on Dinakaran.