ஈரோடு,ஜூலை16: மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்து தர கேட்டு கிராம மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து, ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள செம்படபாளையம்,அம்மன் கோயில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள்,கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் நாங்கள் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.அனைவரும் விவசாய வேலைகள் செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் இருந்து குறிச்சியில் உள்ள பிரதான சாலைக்கு செல்வதென்றால் சுமார் 6 கி.மீ தூரம் பயணித்து வர வேண்டும்.
ஆனால், அந்த சாலையும் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லாமல் மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது.அதேபோல, எங்கள் பகுதியில் குடிநீர் வசதியோ, மின்சார வசதியோ இல்லை. இதுகுறித்து எங்களது பகுதி ஊராட்சி தலைவரிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் கிராமப் பகுதிக்கு போதிய சாலை, குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அது தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குடிநீர், மின்சாரம் கேட்டு கிராம மக்கள் மனு appeared first on Dinakaran.