- தாமு செட்டியார் நகைக்கடை வீடு
- கோபி
- முன்னாள் அமைச்சர்
- கே.ஏ.செங்கோட்டையன்
- கோபி ஜெகன் மெட்டல் மார்ட்
- காமராஜ்
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- கல்வி அபிவிருத்தி நாள்
- தின மலர்
கோபி,ஜூலை 16: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கோபி ஜெகன் மெட்டல் மார்ட் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.கோபி அருகே மொடச்சூரில் உள்ள ஜெகன் மெட்டல் மார்ட் நிறுவனத்தில் ஆண்டு தோறும் காமராஜர் பிறந்தநாள் அன்று அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்துவதோடு, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது வழக்கம்.
நேற்று நிறுவன வளாகத்தில் ஜெகன் மெட்டல் மார்ட் நிறுவன உரிமையாளர் ஜெகநாதன் தலைமையில் நிர்வாக இயக்குநர் பாலசிங் முன்னிலையில் நடைபெற்றவிழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெகன் மெட்டல் மார்ட் நிறுவனம் சார்பில் 20 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சத்தியபாமா, கோபி யூனியன் சேர்மேன் மவுதீஸ்வரன்,தாமு செட்டியார் நகை மாளிகை உரிமையாளர் சேகர்,கோபி நகராட்சி கவுன்சிலர் பிரினியோ கணேஷ்,முன்னாள் நகராட்சி தலைவர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தாமு செட்டியார் நகை மாளிகை கோபியில் புதிய கிளை திறப்பு appeared first on Dinakaran.