×

கோபி அருகே நஞ்சநாய்க்கனூரில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்

Women, well, Gobichettipalayam*செடி, கொடிகளில் சிக்கியதால் காயமின்றி தப்பினார்

கோபி : கோபி அருகே உள்ள நஞ்சநாய்க்கனூரில் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை கோபி தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயில் அருகே உள்ள பண்ணாரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். கூலித்தொழிலாளியான இவரது மனைவி சுந்தரி (30). இவர் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள நஞ்சநாய்க்கனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.நேற்று காலை சுந்தரியின் அலறல் சத்தம் கேட்டு விவசாய வேலைக்காக வந்த தொழிலாளர்கள் கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது சுந்தரி உள்ளே விழுந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கோபி தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் கயிறு மூலமாக இறங்கி சுந்தரியை உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் தண்ணீர் இல்லை. இருந்தபோதிலும் சுவர்களில் இருந்த செடி, கொடிகளில் சிக்கி கீழே விழுந்ததால் சுந்தரி காயமின்றி தப்பியது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கோபி அருகே நஞ்சநாய்க்கனூரில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண் appeared first on Dinakaran.

Tags : Nanjanaykanur ,Kobe ,Gobi ,Bannaripalayam ,Velangoil ,Erode District Gobi ,Nanjaykanur ,Dinakaran ,
× RELATED கோயிலில் உண்டியல், நகை எடுத்தால்...