நேபாள பிரதமராக சர்மா ஒலி இன்று பதவி ஏற்பு

காத்மண்டு: நேபாள கூட்டணி ஆட்சியில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரதமர் பிரசந்தா ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து நேபாள கம்யூனிஸ்ட் தலைவர் கே.பி.சர்மா ஒலி பிரதமராக நேபாளி காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து 165 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆதரவு கடிதத்துடன் குடியரசு தலைவர் ராம் சந்திர பவுலை சந்தித்த சர்மா ஒலி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி நேபாள பிரதமராக பதவியேற்க சர்மா ஒலிக்கு குடியரசு தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நேபாள பிரதமராக 3ம் முறையாக கே.பி.சர்மா ஒலி பதவி ஏற்க உள்ளார்.

The post நேபாள பிரதமராக சர்மா ஒலி இன்று பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: