×
Saravana Stores

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

 

பவானி, ஜூலை 14: தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் வரவேற்புரை ஆற்றினார். ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கைலாசம், சரஸ்வதி, தவசியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், உறுப்பினர் படிவங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். ஈரோடு கிழக்கு தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீனிவாசன், ஒலகடம் நகர செயலாளர் ஆறுமுகம், பவானி பொறுப்பாளர் ரகுமான், மகளிரணி பொறுப்பாளர் கல்பனா, இளைஞர் அணி பொறுப்பாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Life Rights Party District Workers ,Bhavani ,Tamil Nadu Life Rights Party Erode ,Erode North District ,Palaniswami ,Erode West District ,Velmurugan ,Tamil Nadu Life Rights Party ,
× RELATED வசதிகள் குறைவு, கடைகளுக்குள் தண்ணீர்...