×
Saravana Stores

முறைகேடாக குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் இணைப்பை துண்டித்து கொள்ள வேண்டும்

 

மேட்டுப்பாளையம், ஜூலை 13: மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் 2023-2024ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள அனைத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு நகராட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் முறை கேடாக குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து குடிநீர் இணைப்பினை துண்டித்துக்கொள்ளுமாறும், முறையாக விண்ணப்பித்து குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் அபராத தொகை விதிக்கப்படுவதுடன், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post முறைகேடாக குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் இணைப்பை துண்டித்து கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Mettupalayam Municipality ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் அக்.31க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை