7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடந்த 13 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் எம்எல்ஏக்கள் மரணம், ராஜினாமா மற்றும் பிற கட்சிகளில் இணைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றது.

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரானாகட், தக்‌ஷின், பாக்டா மணிக்கட்லா, இமாச்சலப்பிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர், நளகர், பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு, உத்தரகாண்டில் பத்ரிநாத், மங்க்ளார், பீகாரில் ரூபாலி, மத்தியப்பிரதேசத்தில் அமர்வாரா தொகுதிகளில் இன்று வாக்குஎண்ணிக்கை நடக்கிறது. இமாச்சல் மாநிலம் டெஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

The post 7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடந்த 13 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: