செய்யாறு, ஜூலை 13: செய்யாறு, தண்டரை, பின்னப்பட்டு கிராமங்களில் கருப்பண்ணசாமி, முனீஸ்வரர் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் பின்னப்பட்டு கிராமத்தில் சி18 ஆம் படி கருப்பண்ணசாமி மகா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேக விழாவினை ஒட்டி நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் கால யாக பூஜையும், நேற்று காலை 6 மணி அளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் கலச புறப்பாடுடன் 7.30 மணி அளவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் பின்னப்பட்டு சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் விழாவில் பங்கேற்றனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் செய்யாறு அடுத்த தண்டரை கிராமத்தில் புதியதாக கட்டி எழுந்தருளிய முனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முனீஸ்வரருக்கு வாசனை திரவங்களால் சிறப்பு அபிஷேகம், கற்பூர தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. யாக சாலை பூஜையுடன் முனீஸ்வரருக்கு புனித நீரை கோபுர உச்சியில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் கும்பாபிஷேகம் விழாவில் சுவாமியின் சிலைகளுக்கு மேல் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
The post கருப்பண்ணசாமி, முனீஸ்வரர் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசம் செய்யாறு தண்டரை, பின்னப்பட்டு கிராமங்களில் appeared first on Dinakaran.