காமராஜர் பிறந்த நாள் காங்கிரசாருக்கு செல்வப்பெருந்தகை உத்தரவு

சென்னை: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: காமராஜரின் 122வது ஆண்டு பிறந்த நாளை தமிழகம் முழுவதும் ஜூலை 15 அன்று கோலாகலமாக கொண்டாட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன். காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்குகிற வகையில் கருத்தரங்குகள், ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஏழை பங்காளனாக இருந்து வேட்டி கட்டிய தமிழர் எவரும் நிகழ்த்தாத சாதனைகளை இந்திய அரசியலில் செய்து காட்டிய காமராஜர் புகழை தமிழகம் முழுவதும் பரப்புகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் அவரது பிறந்தநாளை தேசிய திருவிழாவாக கொண்டாட வேண்டும்.

The post காமராஜர் பிறந்த நாள் காங்கிரசாருக்கு செல்வப்பெருந்தகை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: