இந்த வழக்கில் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19-ன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் முடிந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிப்பதாக கூறியிருந்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.
இந்த கைதை எதிர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு கூடுதல் அமர்வுக்கு மாற்றியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை கருத்தில் கொண்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், 90 நாட்களுக்கு மேல் கெஜ்ரிவால் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம், பதவி விலக வேண்டுமா அல்லது முதலமைச்சராக தொடர வேண்டுமா என்ற முடிவை கெஜ்ரிவாலிடமே விட்டு விடுகிறோம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ED வழக்கில் ஜாமின் கிடைத்தாலும் சிபிஐ வழக்கில் ஜாமின் வழங்காததால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்: மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர் என மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.