×
Saravana Stores

கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் குட்டிகளுடன் சாலையை கடந்த யானை கூட்டம்

 

தொண்டாமுத்தூர், ஜூலை 12: கோவை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மருதமலை, அதனை சுற்றி உள்ள வடவள்ளி, ஐஓபி காலனி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை மற்றும் 2 காட்டு யானைகள் மருதமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் மலைச்சாலையில் கடந்து சென்று வந்தன.

நேற்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் மலைச்சாலையை கடந்து சென்றுள்ளன. இதனை கோயிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வன விலங்குகள் நடமாட்டத்தால் மாலை 6 மணிக்கு மேல் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். காட்டு யானைகள் அப்பகுதியில் கடந்து சென்று உள்ளதால் அங்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் குட்டிகளுடன் சாலையை கடந்த யானை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Marudamalai Temple ,Thondamuthur ,Marudamalai ,Vadavalli ,IOP Colony ,Western Ghats of Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்