×
Saravana Stores

மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு

 

கோவை, ஜூலை 12: கோவை மாநகர காவல்துறையின் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காந்திபுரம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த நேகா என்ற பெண்ணை மீட்டு ஈரநெஞ்சம் காப்பகத்தில் சேர்த்தனர். நேகா சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு தக்க சிகிச்சை வழங்கப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் நேகாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், நேகா ஹரியான மாநிலம் அம்சலா கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த பிப்ரவரி மாதம் ஹரியானாவில் இருந்து தனது குடும்பத்துடன் கோவைக்கு சுற்றுலா வந்தபோது நேகா வழி தவறி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் நேகாவின் தந்தை குருபிராசத்தை தொடர்புகொண்டு பேசி அவரை கோவைக்கு வரவழைத்தனர். கோவை வந்த குருபிரசாத்திடம் போலீசார் நன்கு விசாரணை செய்து நேகாவை அவருடன் அனுப்பி வைத்தனர்.

The post மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Police ,Gandhipuram ,Nega ,Erenenjam ,
× RELATED பட்டாசு கடை வசூல்; புகார் தர போலீசார் அழைப்பு