×
Saravana Stores

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி

காஞ்சிபுரம், ஜூலை 11: காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் 30 நாட்கள் தற்காப்பு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவின்பேரில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை மற்றும் ஏகனாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 80 பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம் மற்றும் திறன் மேம்பாடு பயிற்சிகள் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 10ம் தேதி வரை 30 நாட்கள் இந்த பயிற்சி நடைபெறும். இந்த பயிற்சி முகாமில் தற்காப்பு பயிற்சி மட்டுமின்றி பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் தடுப்பு பிரிவு எஸ்ஐ பிரபாவதி, சோமசுந்தரம், சுப்ரமணி, சிறுவர் உதவி மைய உறுப்பினர் அமுதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் சுசீலா, உதயகுமார், தினகரன், ஏகனாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுகுணாதேவி, ஓரிக்கை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram District Police ,Kancheepuram ,Save Female Children ,Educate Female Children ,Kanjipuram District Police ,SP ,Sanmugham Uttarawinber ,Kancheepuram District Police ,Dinakaran ,
× RELATED வளர்ப்பு நாய்குட்டிகள் இறந்ததால்...