×
Saravana Stores

பேரூர் அருகே டிரைவர் திடீர் சாவு: மனைவி போலீசில் புகார்

தொண்டாமுத்தூர், ஜூலை 10: கோவை அருகே பேரூர் பக்கம் உள்ள மோளபாளையம் பஜனை கோயில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (41). டிரைவராக வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சென்றவர் நேற்று திடீரென உடல்நிலை சரியில்லை என கூறி தனியார் மருத்துவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று உள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றபோது டாக்டர்கள் வரும் வழியில் ரமேஷ் உயிரிழந்து விட்டதாக கூறினார். இதை தொடர்ந்து ரமேஷ் மனைவி தேன்மொழி (33) பேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேரூர் அருகே டிரைவர் திடீர் சாவு: மனைவி போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Perur ,Thondamuthur ,Ramesh ,Molapalayam Bhajanai Koil Road ,Coimbatore ,
× RELATED நீரில் தவறி விழுந்தவர் சாவு