இந்த வழக்கில் சங்கரிடம் விசாரணை மேற்கொள்ள ஒரு வாரம் போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும் என அனுமதி கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல், கரூர் டவுன் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக, சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கர், கரூர் அழைத்து வரப்பட்டு நீதிபதி முன் நேற்று காலை 11 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, 4 நாட்கள் போலீஸ் காவலில் சங்கரை விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
The post யூடியூபர் சங்கருக்கு 4 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.