ஆந்திராவில் ஷர்மிளாதான் எதிர்க்கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் மோடியின் விசுவாசிகள்தான்: தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி காட்டம்

திருமலை: ஆந்திராவில் ஷர்மிளாதான் உண்மையான எதிர்க்கட்சி தலைவர். சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் மோடியின் விசுவாசிகள்தான் என தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி கூறி உள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் 75வது பிறந்தநாள் விழா நேற்றுமுன்தினம் நடந்தது. மாநில காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த்ரெட்டி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: ஒய்.எஸ்.ஆரின் ஆட்சி அழியாத முத்திரை. ஆந்திராவில் 1,400 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்று காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தவர். தற்போது அவரது உத்வேகத்தோடு ராகுல்காந்தி பாத யாத்திரை செய்தார். அதன்மூலம் கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. மோடி 3வது முறையாக வெற்றி பெற்றாலும் அது வெற்றியாகாது. ஆந்திராவில் ஷர்மிளா தற்போது சளைக்காமல் போராடுகிறார். ஆந்திராவில் கூட்டணி அரசில் பாஜ உள்ளது. இங்கு பாஜ என்றால் சந்திரபாபுநாயுடு, ஜெகன்மோகன்ரெட்டி மற்றும் பவன்கல்யாண்தான். இவர்களது கட்சிகள் வெவ்வேறாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் பாஜவின் விசுவாசிகளாக உள்ளனர். எனவே தற்போது ஆந்திராவில் ஒய்.எஸ்.ஷர்மிளா மட்டுமே மக்கள் பக்கம் இருக்கிறார். சர்மிளா மட்டும்தான் பொதுப்பிரச்னைகளுக்கு போராடுகிறார். எனவே ஆந்திராவில் ஷர்மிளாதான் உண்மையான எதிர்க்கட்சித்தலைவர். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஆந்திராவில் ஷர்மிளாதான் எதிர்க்கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் மோடியின் விசுவாசிகள்தான்: தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: