பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி நாளை சந்திப்பு

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 9 மாதத்திற்கான 2024-25ம் நிதியாண்டின் முழு பட்ஜெட் மக்களவையில் வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பட்ஜெட் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக பிரபல பொருளாதார நிபுணர்களை பிரதமர் மோடி நாளை சந்திக்க உள்ளார். இதில், பொருளாதார வல்லுநர்கள், துறைசார் நிபுணர்கள் தவிர, நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி மற்றும் பிற உறுப்பினர்களும் கலந்துகொள்கின்றனர்.

The post பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி நாளை சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: