தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை : தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என அடுக்கடுக்காக பல குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் மாறிமாறி குற்றச்சாட்டி வருகிகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிதாக நியமிக்கப்பட்ட சென்னை காவல் ஆணையர் அருண், தலைமைச்செயலாளர், உள்த்துறை செயலாளர், கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கூட்டத்தில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: