இலங்கை அதிபர் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டி

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராடியதால் அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இதையடுத்து பொருளாதார நெருக்கடிகளுக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். தொடர்ந்து ரணில் விக்ரம சிங்கே இலங்கை அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரம சிங்கேவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் ஆணையம் கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.

இதனிடையே “இலங்கை அதிபரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளா? அல்லது 6 ஆண்டுகளா? அதிபர் தேர்தல் நடத்துவதில் உள்ள குழப்பத்தை தௌிவுப்படுத்தும் வரை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்” என இலங்கை நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை(ஜூலை 1) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை தேர்தல் ஆணைய தலைவர் ரத்நாயக்க வௌியிட்டுள்ள அறிக்கையில், “2024ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. வரும் 17ம் தேதிக்கு பிறகு அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே சுயேச்சையாக களம் இறங்க உள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் திறமை ரணில் விக்ரம சிங்கேவுக்குதான் உள்ளது. அவர் சுயேச்சையாக போட்டியிடுவார் என்று அவரது உதவியாளர் தெரிவித்தார்.

The post இலங்கை அதிபர் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டி appeared first on Dinakaran.

Related Stories: