தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு.. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.200 விற்பனை: பொதுமக்கள் கவலை..!!

சென்னை: தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு என்று உணவு பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்தவகையில் முக்கிய உணவு பொருட்களின் ஒன்றான துவரம் பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. 3 மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.130 முதல் ரூ.140க்கு விற்பனையான துவரம் பருப்பின் விலை தற்போது ரூ.180 முதல் ரூ.200ஆக விலை அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததே துவரம் பருப்பு விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

துவரம் பருப்பின் விலை உயர்ந்துள்ளதால் மாதம் 10 முதல் 15 நாட்கள் பருப்பு குழப்பு வைத்தவர்களின் நிலை மாறியுள்ளது. மாதம் 2 கிலோ துவரம் பருப்பு வாங்கிய பல இல்லத்தரசிகள் தற்போது மாதம் அரை கிலோ மட்டுமே வாங்கும் நிலை உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். ஒரே மாதத்தில் துவரம் பருப்பின் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் துவரம் பருப்பின் விற்பனை மந்தமடைந்துள்ளது. சீசன் நேரத்தில் துவரம் பருப்பின் விலை உயர்ந்து இருப்பதால் இப்போதைக்கு அதன் விலை குறைய வாய்ப்பில்லை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு.. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.200 விற்பனை: பொதுமக்கள் கவலை..!! appeared first on Dinakaran.

Related Stories: