மேலே பட்டியலிடப்பட்ட பட்டபடிப்புக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் ஆணையரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்படமாட்டாது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள். கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம். அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 08.07.2024 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 23.06.2024 முதல் 08.07.2024 மலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
ஜூலை 08ம் தேதிக்குள் தபால், கூரியர் சேவை வாயிலாக வந்து சேர வேண்டும்.
The post 2024-2025-ம் கல்வியாண்டிற்கான யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பட்டப் படிப்புக்கான சேர்க்கை அறிவிக்கை appeared first on Dinakaran.