மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டை ஆக. 31 வரை நீட்டிப்பு

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் பயண சலுகை அட்டையை இணையதளம் வாயிலாக பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இருப்பினும் புதிய பேருந்து பயண அட்டை பெற்றுக் கொள்ளும் வரை கால அவகாசம் வழங்க கோரியுள்ளார்கள். அதன் அடிப்படையில், அனைத்து மாற்றுத்திறனாளிகளும் ஆன்லைன் பயண சலுகை அட்டையை பெற்று கொள்ள ஏதுவாக, 2023-2024 ஆண்டிற்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி வரும் ஆக.31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டை ஆக. 31 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: