அரியானா காங். எம்எல்ஏ, மகளுடன் பாஜவில் இணைந்தார்

புதுடெல்லி: அரியானாவின் முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மருமகள் கிரண் சவுத்ரி. இவர் பிவானி மாவட்டத்தின் தோஷாம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ. இவரது மகள் ஷ்ருதி சவுத்ரி அரியானா காங்கிரஸ் செயல் தலைவராக இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் நடத்தப்படுவதாக முன்னாள் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக இருவரும் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இருவரும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று கிரண்சவுத்ரி மற்றும் ஷ்ருதி ஆகியோர் பாஜவில் இணைந்தனர். ஒன்றிய அமைச்சர் மனோகர்லால் கட்டார், தேசிய பொது செயலளார் தருண் சக், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் இதர பாஜ மூத்த தலைவர்கள் முன்னிலையில் கிரண் சவுத்ரி மற்றும் அவரது மகள் ஷ்ருதி ஆகியோர் பாஜவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

The post அரியானா காங். எம்எல்ஏ, மகளுடன் பாஜவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: