ஆம்ஆத்மி கட்சிக்காக கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டார்: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பு, ‘‘ சவுத் குரூப் எனப்படும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அடங்கிய குழுவிடம் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். தனது கட்சிக்காக இந்த பணத்தை கேட்டுள்ளார். இதில் ரொக்கமாக கணிசமான பணம் கட்சிக்கு தரப்பட்டு கோவா தேர்தலில் செலவு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொறுப்பாளர்களாக உள்ள அத்தனை பேரும் குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர் என்று தெரிவித்தது.

The post ஆம்ஆத்மி கட்சிக்காக கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டார்: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: