இமாச்சல் முதல்வர் மனைவி இடைத்தேர்தலில் போட்டி

சிம்லா: இமாச்சலபிரதேச டெஹ்ரா தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் சுக்குவின் மனைவி போட்டியிட உள்ளார். இமாச்சலபிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் கடந்த மார்ச் 22ம் தேதி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து அன்றைய தினமே பாஜவில் இணைந்தனர். இதையடுத்து காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் நேற்று வௌியிட்ட வேட்பாளர் பட்டியலில் இமாச்சலபிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவின் மனைவி கமலேஷ் தாக்கூர் பெயர் இடம்பெற்றுள்ளது. டெஹ்ரா தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து சிம்லாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கூறியதாவது, “மக்களவை தேர்தலின்போதும் என் மனைவி கமலேஷ் தாக்கூர் போட்டியிட வேண்டும் என கட்சி மேலிடம் என்னிடம் கூறியது. ஆனால் என் மனைவி தேர்தலில் போட்டியிடுவதை நான் விரும்பவில்லை. கட்சி நடத்திய கணக்கெடுப்பு, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளை கேட்ட பிறகு என் மனைவியை நிறுத்த கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளது. இந்த முறையும் மேலிடத்தின் முடிவை என்னால் மறுக்க முடியவில்லை. என் மனைவி டெஹ்ரா தொகுதியை சேர்ந்தவர். வலுவான வேட்பாளர் தேவை என்பதால் அவர் போட்டியிட சம்மதித்தேன்” என்றார்.

The post இமாச்சல் முதல்வர் மனைவி இடைத்தேர்தலில் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: