கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

சாயல்குடி ஜூன் 19: சாயல்குடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு 3 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கடலாடி அருகே பெருமாள் தலைவனேந்தல் கிராமத்தில் பகவதி அம்மன் கோயில் 15ம் ஆண்டு ஆனி மாத பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு பெரியமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பெரிய மாட்டு வண்டியில் 11 மாடுகளும், சிறிய மாட்டு வண்டியில் 17 மாடுகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டியில் 23 மாடுகளும் பங்கேற்றன. பெரிய மாடுகளுக்கு 8 மைல் தூரமும், சின்ன மாடுகளுக்கு 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மைல் தூரமும் எல்லையாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாட்டுவண்டி சாரதிகளுக்கும் ரொக்க பரிசு மற்றும் குத்துவிளக்கு வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தினை சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் பல்வேறு வெளி மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மாட்டு வண்டி பந்தைய ரசிகர்கள் சாலையில் இருபுறங்களிலும் நின்று கண்டு ரசித்தனர்.

The post கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: