×

ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆய்வு

திருப்பூர், ஜூன் 16: சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா நேற்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஒன்றிய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. டிக்கெட் மையம், இருசக்கர வாகன நிறுத்தம், நடைமேடை விரிவாக்கம் மற்றும் ரயில் நிலைய நுழைவு வாசல் புதுப்பிப்பு ஆகிய பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் கூட்ஷெட் விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது திருப்பூர் ரயில் நிலைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Salem Railway ,Divisional Manager ,Pankaj Kumar Sinha ,Union Government ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து