மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றும் மருத்துவர், தனியார் நிறுவனத்தினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றும் மருத்துவர், தனியார் நிறுவனத்தினர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஆகஸ்ட் 15ம் ேததி சுதந்திர தின விழா அன்று விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சி தலைவர் – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.25,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர் – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள், “https://awards.tn.gov.in” என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், விவரங்களை இணைத்து 5.7.2024க்குள் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.விருதுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு குழுவினரால் தெரிவு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றும் மருத்துவர், தனியார் நிறுவனத்தினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: