தென்மேற்கு பருவமழை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் நேற்று மின்சாரம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர் பகிர்மான இயக்குநர், அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர் வரும் தென் மேற்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 12 மண்டலங்களில் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகளை கண்டறிந்து, அப்பணிகளை துரிதமாக செய்து முடிக்க அனைத்து மின் பகிர்மான தலைமை மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து அலுவலர்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டார்.

The post தென்மேற்கு பருவமழை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: