×

பாடாலூர் அடுத்த சிறுவயலூரில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம்

 

பாடாலூர், ஜூன் 5: ஒவ்வொரு ஆண்டும் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு கலைஞரின் 101வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சிறுவயலூர் கிராமத்தில், கட்சி கொடியேற்றி, கேக் வெட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, உணவுகள் ஆகியவற்றை மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர்.வல்லபன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், ஒன்றிய அவைத் தலைவர் ராமராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், கிளைச் செயலாளர்கள் சுரேஷ், ராஜலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் கலைஞர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

The post பாடாலூர் அடுத்த சிறுவயலூரில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Padalur ,Chiruvayalur ,DMK ,Tamil Nadu ,Chief Minister of Tamil Nadu ,Perambalur District ,Siruvayalur ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் பாடாலூரில்...