ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு

திருவொற்றியூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக 100 நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், புகழாரங்கங்கள் என பல்வேறு தலைப்பில் நடிகர்கள், திரைத்துறையினர், இயக்குனர்கள், பத்திரிகையாளர்கள், ஆன்மீக பெரியவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்டது. தேர்தல் காரணமாக தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. தற்போது மீதமுள்ள 31 நிகழ்ச்சி நடத்திட மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்துவருகிறார்.

நாளை காலை 9 மணி அளவில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் மெய்நிகர் அரங்கம் திறக்கப்பட உள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் 3டி ‌ கண்ணாடி மூலம் திரையை பார்க்கும்போது கலைஞரை நேரில் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படும் என கூறப்படுகிறது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திறப்புவிழா ஏற்பாடு அண்ணாமலை மன்றத்தில் நடந்து வருகிறது. தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என சென்னை கிழக்கு மாவட்ட திமுக அறிவித்துள்ளது.

The post ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: