தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் 4ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. நாளை (ஜூன் 1) 7வது இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், ஜூன் 4ம் தேதி காலை 7 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பு, பாதுகாப்பு மற்றும் பிற பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் சங்கர்லால் குமாவத், இணை தலைமை தேர்தல் அலுவலர் காந்த் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: